2 நாட்கள் பட்டாசு வெடிக்கவும், ட்ரோன்கள் பறக்கவும் தடை!! அதிரடி உத்தரவு!!

 
ட்ரோன்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு விழாக்களில் பங்கேற்கிறார். இதையொட்டி இன்று   24ம் தேதி இரவு பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு திருப்பூர் வருகிறார். அவருக்கு பல்லடம் வடுகபாளையம் அருகே திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் திருப்பூரில் இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி காலை 10 மணிக்கு பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் குறு, சிறு தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்கி கயிறு தொழில்களை தொடங்கி வைக்கிறார். விழா நிறைவு பெற்றதும் மதியம் ஈரோட்டில் நடக்கும் விழாவுக்கு செல்கிறார்.

திருப்பூர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில், 2 துணை கமிஷனர்கள், 2 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

திருப்பூா் மாநகருக்கு இன்று மாலை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லடம் சாலை சந்தைப் பேட்டை, திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு, அண்ணா பெரியாா் சிலை, புஷ்பா ரவுண்டானா, குமாா் நகா் ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

ஸ்டாலின் டெல்லி பயணம் கார்

இந்நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 24) மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் திருப்பூர் வருகிறார். பாதுகாப்பு நலன் கருதி மாநகருக்குள் பட்டாசுகள் வெடிக்கவும், பலூன்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) பறக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web