கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு தடை!! மத்திய அரசு அதிரடி!!

 
கோதுமை

ரஷ்யா உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் பிறகு, விலைவாசி உயர்வைக் கட்டுப்பட்டது. இதனை மேலும் கட்டுப்படுத்தும் வகையிலும், உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்யும் வகையிலும் கோதுமை மாவு, மைதா, ரவை மற்றும் முழுக்கால் ஆட்டா இவைகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய  அரசு நேற்று தடை உத்தரவை விதித்துள்ளது. 

கோதுமை


 இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  'சில சந்தர்ப்பங்களில் இந்திய அரசின் அனுமதிக்கு உட்பட்டு இந்த பொருட்களின் ஏற்றுமதி அனுமதிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரால், வெளிநாடுகளில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்நாட்டு சந்தையில் கோதுமை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை செய்யும் வகையில் பொருட்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

ரவை

மேலும், வட மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் வெப்ப அலையின் காரணமாக தானியங்கள் கருகி கோதுமை உற்பத்தி குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடை விதித்தது.  மேலும் தொழில் அமைப்பு ரோலர் மாவு மில்லர்களின் கூட்டமைப்பு, கடந்த சில நாட்களாக கோதுமை கிடைக்காதது மற்றும் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் கோதுமை விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web