இன்று வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்.. வேலை நிறுத்தம் திடீர் ஒத்தி வைப்பு!

 
அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

நாடு  முழுவதும் இன்று அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், இன்று நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம் போல இயங்கும் என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. முன்னதாக இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் வங்கி

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் இன்று கோடிக்கணக்கான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. 

சமீப காலமாக வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் அதிகரித்து வருவது மட்டுமின்றி இது அனைத்திலும் பொதுவான கருத்து உள்ளது என்றார். இந்த வேலை நிறுத்த போராட்டம் வங்கி ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் கூறிருந்தார். 

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!

மேலும் சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி நடவடிக்கைகளை அவுட்சோர்சிங் செய்வதாகவும் ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், இன்றைய போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web