நாடு முழுவதும் நவம்பர் 19ம் தேதி வங்கிகள் ஸ்ட்ரைக்! வங்கி, ஏடிஎம் சேவைகள் பாதிக்கும் அபாயம்!

 
வங்கி வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் வரும் நவம்பர் 19ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கி சேவைகளும், ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பொதுவாக மூன்றாவது சனிக்கிழமையான நவம்பர் 19ம் தேதி வங்கி வேலை நாள். அன்றைய தினம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், அடுத்த நாளான ஞாயிறு விடுமுறை தினத்தையும் சேர்த்து அடுத்தடுத்து இரு தினங்களுக்கு வங்கிகள் இயங்காது. இதனால், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் பாதிக்கப்படுகிற அபாயம் உருவாகியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம், மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற நவம்பர் 19ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், நாடு முழுவதும் நவம்பர் 19ம் தேதி வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது..


இது குறித்து சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், சமீப காலமாக வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் அதிகரித்து வருவது மட்டுமின்றி இது அனைத்திலும் பொதுவான கருத்து உள்ளது என்றார். இந்த வேலை நிறுத்த போராட்டம் வங்கி ஊழியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

வங்கி விடுமுறை

மேலும் சோனாலி வங்கி, MUFG வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஆகியவற்றால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாங்க் ஆப் மகாராஷ்டிரா போன்ற அரசு வங்கிகள் தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதாகவும், கனரா வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கிகள் பல வங்கி நடவடிக்கைகளை அவுட்சோர்சிங் செய்வதாகவும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web