பகீர் வீடியோ!! எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை உணவில் கரப்பான்பூச்சி !!

 
கரப்பான்பூச்சி

தலைநகர் டெல்லியில் பிரபலமான மருத்துவமனைகளில் ஒன்று  எய்ம்ஸ் மருத்துவமனை. இதே மருத்துவமனையில்  நோயாளிகளுக்கு உணவும் வழங்கப்பட்டு வருகிறது.  ஒருவர் குழம்பில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை உடனடியாக படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. மேலும் அதில் அவர் கூறும்போது, ‘‘சாப்பாடுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட இந்த குழம்பு 4 வயது குழந்தைக்கு கொடுக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார். 

கரப்பான்பூச்சி

சம்பந்தப்பட்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் 2 நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்த 8 நாட்களாக குழந்தை எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களின் ஆலோசனையின்படி பருப்பு குழம்பும், கஞ்சியும் கொடுக்கப்பட்டது. அதில்தான் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் குடும்பத்தினர் கொதித்தெழுந்து மருத்துவ மனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது. மேலும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web