பகீர் வீடியோ!! ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் குதித்த இளம்பெண்!!

 
ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்

இந்தியாவில் பெண்களுக்கான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி வந்த போதிலும் அசம்பாவிதங்கள் தொடர்வதை தவிர்க்க முடியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அந்த வகையில் மகாராஷ்டிரா  மாநிலம் அவுரங்காபாத்தில் 17 வயது இளம்பெண்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் ஏறியது முதல் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்தார்.

ஆட்டோவில் இருந்து குதித்த இளம்பெண்

அவரிடம் இருந்து தப்பிக்கவும், ஆட்டோவை நிறுத்தவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை நிறுத்துவதாக காணோம். இனி பொறுக்க முடியாது என மனதில் நினைத்து அந்த இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்தார். உடனே அங்கிருந்த சிலர் சாலையில் கிடந்த அந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் முழுவதுமே அருகில் இருக்கும் சாலையோர  சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.


இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன்  இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சையது அக்பர் ஹமீதையும் சுற்றி வளைத்து  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட இச்சம்பவம் மகாராஷ்டிரா முழுவதும் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web