பகீர் வீடியோ!! கை அமுக்கி விடு!! மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை!!

 
ஊர்மிளா

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு ஒழுக்கம் மற்றும் கல்வி கற்க அனுப்பி வைக்கிறார்கள். அவர்களை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனால் பல அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன. இதனால் மாணவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரியதாக பாதிக்கப்படுகிறார்கள். அது குறித்த பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவதும் உண்டு. 

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் இயங்கி வரும் போகாரி தொடக்கப் பள்ளியில் ஊர்மிளா சிங் என்ற உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரின் வீடியோ தான் தற்போது இணையதளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.


அதில், ஆசிரியை தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து தனது கைகளுக்கு மசாஜ் செய்து விடுமாறு சொல்கிறார். இதனால் மாணவனும், நாற்காலியில் சொகுசாக அமர்ந்திருந்த ஆசிரியைக்கு நின்றபடியே மசாஜ் செய்கிறார். இந்த காட்சிகள் வகுப்பறையில் அனைத்து மாணவ - மாணவியர் முன்னிலையில் நடக்கிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளி மீதும், நிர்வாகத்தின் மீதும் திருப்தி அடைந்துள்ளனர்.

இதனை யாரோ சிலர் மறைமுகமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து ஆசிரியை ஊர்மிளா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் இது குறித்து, ஹர்தோய் அடிப்படை கல்வி அதிகாரி பிபி சிங் கூறும் போது, ‘‘இந்த காணொளியை சமூக வலைதளங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால்தான் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது’’ என்று கூறினார்.பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாடங்களையும், ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்காமல், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவது வேதனைக்குரிய விஷயமாகும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web