கவனமா இருங்க!! இது வெறும் ட்ரெய்லர் தான்!! மெயின் பிக்சரே இனிமேல் தான்!! வெதர்மேன் எச்சரிக்கை!!

 
வெதர்மேன்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் தொடர்கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக்கடலில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது மழை தீவிரம் அடைந்து உள்ளது.இதனால் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

இன்று இரவு அச்சச்சோ!! வெதர்மேன் பரபரப்பு தகவல்!!

நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை இன்னும் நின்றபாடில்லை. தற்போது தென்மேற்கு வங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடற்பகுதியில் கிழக்கில் உள்ளது. இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இலங்கையின் வடக்கு பகுதிக்கு வரும். இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்போது வரை பெய்திருப்பது ஆரம்பம் தான். நேரம் செல்ல செல்ல இந்த மழை வலுக்கும்.  கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை இனிதான் மெயின் பிக்சரே அந்த அளவுக்கு மழை வெளுத்து வாங்கக் காத்திருக்கிறது. அதன்பின் இது உள்மாவட்ட மழையை அரபிக்கடல் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. 13ம் தேதி இது அரபிக்கடல் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது.

அதனால் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின்  உள் மாவட்டங்கள், திண்டுக்கல் , திருநெல்வேலி வரை மிதமான மழை பெய்து வருகிறது.  சென்னையை பொறுத்தவரை நவம்பர்  13ம் தேதி வரை 3 நாட்கள் மிகுந்த எச்சரிக்கை தேவை. 14ம் தேதிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையத் தொடங்கும். இன்று முதல் தொடர்ந்து  3 நாட்களில் 200- 300 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சில இடங்களில் 400 - 500 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மழை
இன்று மிக கனமழை அல்லது தீவிர கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன்,  எச்சரிக்கையாக, கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.  டெல்டா மாவட்டங்கள்,  கடலூரில் இருந்து சென்னை வரை அதிகனமழை பெய்யலாம் என  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web