உஷார்!!! வாகனத்தில் குடித்திருப்பவர்களின் பின்னால் அமர்ந்திருந்தாலும் ரூ.10,000 அபராதம்! இன்று நள்ளிரவு முதல் அமல்!

 
குடி போதை மது செக்கிங் போலீசார் டூ வீலர்

தமிழக ‘குடி’ மகன்களே... வாகன ஓட்டிகளே... குடிக்காமல் நல்ல பிள்ளையாக, குடித்திருப்பவர்களின் பின்னால் பவ்யமாக வாகனத்தில் அமர்ந்து செல்பவர்களே... உஷாராக இருங்க. குடித்த பின்னரோ, குடித்திருபவர்களுடனோ வாகன பயணத்தைத் தவிர்த்துடுங்க. இன்று நள்ளிரவு முதல் புதிய வாகன சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. குடி போதையில் வாகனத்தை இயக்குபவர்களின் பின்னால் அமர்ந்திருந்தாலும் இருவருக்கும் இனி தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்  அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் தான் சாலை விபத்துக்கள் அதிகமாக பதிவாகியுள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைபடி 2021ல் மட்டும் 11,419 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  இதற்கு அடிப்படை காரணமாக கூறப்பட்டிருப்பது  சாலை விதிகளை மீறுவதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவதும் தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடை
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில்  2019ல் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டப்படி  மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு  ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த செயல்முறை விதியை  திருத்தி புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் படி வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்தால் , பின்னால் அமர்ந்து செல்பவர்கள்  குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்.

போதை

இருவருக்கும் தலா ரூ.10,000/- அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி  அனைத்து இருசக்கர மற்றும் 4  சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். அதே சமயம் ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web