உஷார்!! தமிழகத்தில் குரங்கு அம்மை?! கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!!

 
குரங்கு அம்மை

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்புக்களை உருவாக்கிவிட்டது. உருமாறிய கொரோனா, ஒமைக்ரான், ஸ்வைன் ஃப்ளு வரிசையில் தற்போது குரங்கம்மை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு வருமா என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன்

அதில் “தற்போது வரை தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்புகள் இல்லை. திருச்சி, நாகர்கோவில் மாவட்டங்களில் இந்த தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது. முற்றிலும் வதந்தி. இருப்பினும் குரங்கம்மை தமிழகத்தில் பரவாது என எந்த உத்திரவாதமும் அளிக்க முடியாது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குரங்கு அம்மை

குரங்கம்மை பாதிப்பு எதிரொலியால் தமிழக – கேரள எல்லைகளில் கண்காணிப் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. குரங்குமை பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளுமே தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மை மாதிரிகளை புனைவிற்கு அனுப்பாமல் சென்னையிலேயே ஆய்வுகளை  மேற்கொள்ளலாம். முன்னேற்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன இருந்தபோதிலும் பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web