உஷார்!! புதிய காற்றழுத்தம்!! 5 மாவட்டங்களில் இடி , மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
காற்றழுத்தம்

இந்தியாவில் பருவமழை காரணமாக தொடர்ந்து பரவலாக பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

இதனால் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில்  தமிழகத்தில் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. 

5 மாவட்டங்களில் கன மழை

இதனையடுத்து  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யலாம். அத்துடன் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையோரயை நோக்கி நகர உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் அந்த பகுதிகளில் மிக  அதிகமாக இருக்கும்.. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில்  மட்டும் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை
அத்துடன்  புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web