உஷார்!! விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!! அதிரடி!!

 
விநாயகர் உயர்நீதிமன்றம்

இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் கொண்டாடங்கள் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் உயர்நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

விநாயகர் உயர்நீதிமன்றம்

அதன்படி  விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள்  போதைப் பொருள், மதுபானங்களை உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும்,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், மனுதாரர், விழா நடத்துபவர்களே பொறுப்பு. 
விநாயகர் ஊர்வலத்தில் ஆபாச நடனம், வார்த்தைகளோ இடம்பெறக்கூடாது. 

விநாயகர் உயர்நீதிமன்றம்
தனிப்பட்ட முறையில் அரசியல் கட்சி, சமூகம், சாதியை குறிப்பிட்டு நடன பாடல்கள் எதுவும் இசைக்கக் கூடாது. 
விநாயகர் ஊர்வலத்தில் அரசியல் கட்சிக்கும், மதத் தலைவருக்கும் ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் அமைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web