உஷார்!! பட்டாசுகளை வெடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

 
பட்டாசு

தீபாவளி பண்டிகை அக்டோபர்  24ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நடப்பாண்டில் கொண்டாட்ட மூடில்  ஷாப்பிங், பட்டாசு, புத்தாடை என களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் குறித்து  போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட்டாசு

அதில் 
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வேதியியல் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை மட்டும் விற்பனை செய்யவும் வெடிக்கவும் வேண்டும். 
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும்.
 பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது. 
 தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது. 
எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. 
மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பெட்ரோல் பங்குகள் எரிபொருள் கிடங்குகள் அருகே பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க  வேண்டும். 
குழந்தைகள் பெற்றோர்கள், பெரியவர்களின் வழிகாட்டுதல் பேரில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 
குடிசைகள், ஓலைக்கூரைகள் உள்ள இடங்களில் வாணவெடிகள், பட்டாசுகளை வெடிக்க கூடாது. 


பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு குடோன்களில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தீ தடுப்பு உபகரணங்களை கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும். 
மருத்துவமனைகள்,  பள்ளிகள், கோர்ட்டுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே  பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. 
பட்டாசு விற்கும் கடைகள் அருகே புகைப்பிடிப்பதோ, புகைத்த சிகரெட் துண்டுகளை வீசி எறிவதை தவிர்க்க வேண்டும். 
நீளமான ஊதுபத்தியை மட்டும் பயன்படுத்தி பட்டாசுகளை வெடிக்க  வேண்டும். 
கால்நடைகள் கட்டப்பட்டிருக்கும் பகுதி அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

 
 உரிமம் இன்றி பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள், குறிப்பிட்ட  நேரம் கடந்து  பட்டாசு வெடிப்பவர்கள்,  அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் தகுந்த குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன்  கண்காணிப்பு கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 
பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை விழிப்புடன் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். 
பட்டாசு பொருட்களை ரயில், பேருந்து, மோட்டார் சைக்கிள் இவைகளில்  எடுத்து செல்ல அனுமதி இல்லை. 

சைலேந்திரபாபு
நெடுஞ்சாலைகளில்  பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். 
பண்டிகை விடுமுறை நாட்களில்  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிப்பதன் மூலம் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை, தீயணைப்பு மற்றும்  மீட்பு பணிகள் துறை அவசர உதவி எண்-100, 112  ஐ 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண் 108 ஐயும் தொடர்பு கொள்ளலாம். 
குற்றங்கள், விபத்துக்கள் இல்லாத தீபாவளியை  பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட அனைத்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web