உஷார்!! அச்சுறுத்தும் எபேலோ வைரஸ்!! 30 பேர் பலி!! பீதியில் உலக நாடுகள்!!

 
எபேலோ

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா மிகப்பெரிய பாதிப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தற்போது அதன் தொடர்ச்சியாக எபேலோ வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எபேலோ

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ‘எபோலா வைரஸ்’ மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதையடுத்து அந்நாட்டு அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உகாண்டாவில் எபோலா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு இரு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி வருகின்றது. 

எபேலோ

இந்நிலையில், உகாண்டாவில் இதுவரை 109 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேன் ரூத் அசெங் தெரிவித்துள்ளார். இதுவரை எபோலோ நோய் தொற்று காரணமாக 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. அதேவேளை, மற்றொரு அண்டை நாடான காங்கோவிலும் எபோலா பரவலுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web