உஷார்!! குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல்!! எல்லைகளில் கண்காணிப்புக்கள் தீவிரம்!!

 
தக்காளி காய்ச்சல்

 இந்தியாவில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. தற்போது தக்காளி காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்களைகளும், தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

தக்காளி காய்ச்சல் குழந்தை

தமிழகத்தில்  இதனை கட்டுப்படுத்தும் வகையில்  கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில்  இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  இந்நோய் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் லான்செட்  மருத்துவ ஆய்வு இதழ் எச்சரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.  

தக்காளி காய்ச்சல்

அதில் கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுதல் போன்ற அறிகுறிகள் உருவாகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு இருப்பதாக  நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ளவும்  சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web