உஷார்! ஒரே நாளில் புதிதாக 2,033 பேருக்கு கொரோனா!

 
கொரோனா

மக்களே ரொம்ப ஜாக்கிரதையா இருங்க... ஒரே நாளில் தமிழகத்தில் மட்டுமே இரண்டாயிரத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு. மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனால சமூக விலகலை முறையா கடைப்பிடியுங்க. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் புதிதாக 2,033 பேருக்கு கொரோனா பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 35 லட்சத்து 24 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து  2,383 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும், இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 74 ஆயிரத்து 199 ஆக உயர்ந்துள்ளதாகவும், தொற்று பாதிப்பால்  இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், அதில் தலைநகர் சென்னையில் 466 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டங்களிலும் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. அதன்படி செங்கல்பட்டு  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு  217 ஆகவும், கோவையில் 187 ஆகவும், , திருவள்ளூரில் 93 ஆகவும், , காஞ்சிபுரத்தில் 68 ஆகவும் , விருதுநகரில் 66 ஆகவும்,  ஈரோட்டில் 60  ஆகவும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?