உஷார்! இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிற நிலையில், இந்த 13 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மழை

சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். 
குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று வீசும். நாளை (1-ம் தேதி) வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web