உஷார்! இன்று முதல் புதிய வாகன சட்டம் நடைமுறை! எகிறும் அபராத தொகை!

 
கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை: முகக்கவசம் அணியாதவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம்

இன்று முதல் சென்னை பெருநகர காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக அபராத தொகை வசூலிக்கப்படுவது நடைமுறைக்கு வருகிறது. வாகன ஓட்டிகளே உஷாராக இருங்க. இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கேமராக்களின் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு, வீட்டிற்கு அபராத ரசீது வந்து சேரும்.

கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு விதிகளை மீறினால், உங்க சம்பள பணம், போனஸ் பணம் என மொத்தமும் அபராதமாகவே கட்ட வேண்டியிருக்கும். அதனால போக்குவரத்து விதிமுறைகளை  கடைப்பிடியுங்க. உங்க பர்ஸுக்கும் நல்லது. ஆயுளுக்கும் நல்லது. கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதற்காக விதிக்கப்படும் அபராத தொகை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹெல்மெட்

இந்நிலையில், தமிழ்நாடு அரசும் புதிய அபராத தொகையை வசூலிக்க கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து சென்னை பெருநகர காவல் துறையும் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும் என அறிவித்தது. விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகையினை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை, அதன் சர்வரில் அப்டேட் செய்துவிட்டது. எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முந்தைய கட்டணமும் தற்போது உயர்த்தப்பட்ட கட்டணமும்.

  • புதிய அபராத தொகை 177 போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதம் ரூபாய். 100 ரூபாய். 500
  • 177A சாலை ஓழுங்குமுறை விதிகளை மீறுதல் ரூபாய். 100 ரூபாய். 500
  • 178 பயனச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வது. ரூபாய். 200 ரூபாய். 500
  • 179 போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது. ரூபாய். 500 ரூபாய். 2000
  • 180 அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000
  • 181 உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 5000
  • 182 தகுதியிழப்பு செய்த பின்னர் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 500 ரூபாய். 10,000
  • 182 B நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடபெரிய வாகனம் புதியது ரூபாய். 5000
  • 183 அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 400 ரூ. 1000 for LMV ரூபாய். 2000 for நடுத்தர பயணிகள் வாகனம்.
  • 184 ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 5000 வரை
  • 185 மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 2000 ரூபாய். 10,000

போக்குவரத்து மாற்றம்

  • 189 சாலைகளில் வேகமாக / பந்தயத்தில் ஈடுபடுவது ரூபாய். 500 ரூபாய். 5,000
  • 192 A அனுமதி (பர்மிட்) இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 5000 வரை. ரூபாய். 10,000 வரை
  • 193 முகவர்கள் (உரிமம் தொடர்பான விதிமீறல்கள்) New ரூபாய். 25,000 to ரூபாய். 1,00,000
  • 194 வாகனங்களில் அதிக அளவில் சுமை ஏற்றுதல் ரூபாய். 2000 மற்றும் ரூபாய். 1000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும். ரூபாய். 20,000 மற்றும் ரூபாய். 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும்.
  • 194 A அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் ரூபாய். 1000 ஒவ்வொரு கூடுதல் பயணிகளுக்கும்.
  • 194 B சீட் பெல்ட் ரூபாய். 100 ரூபாய். 1000
  • 194 C இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் பயணிகள் ரூபாய். 100 ரூபாய். 2000, ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
  • 194 D தலைக்கவசம் ரூபாய். 100 ரூபாய். 1000. ஓட்டுநர் உரிமம் 3 மாதங்கள் தகுதியிழப்பு செய்யப்படும்.
  • 194 E ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருத்தல் ரூபாய். 10,000
  • 196 காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் ரூபாய். 1000 ரூபாய். 2000
  • 199 சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்கள் காப்பாளர் / வாகன உரிமையாளர் குற்றவாளியாக கருதப்படுவார். ரூபாய். 25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை. சிறார்கள் Juvenile Justice Act படி நடவடிக்கை. வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web