மக்களே எச்சரிக்கையா இருங்க!! 282 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல்!!

 
காய்ச்சல்

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் ஸ்டாலின் துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஒரு வகையான மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காய்ச்சல்

அதில் தமிழகம் முழுவதும் தற்போது இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்த மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகளாக  சளி, இருமல், தொண்டைவலி எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிகுறிகள் தான் இன்புளூயன்சா  காய்ச்சல் அறிகுறிகள். இவை ஏற்பட்டால் உடனடியாக அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்  மற்ற குழந்தைகளிடமிருந்து  விலக்கி வைக்க வேண்டும் .

மர்ம காய்ச்சல்

ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக முகக்கவசம், சமூக இடைவெளி இவை தொடர்ந்து பின்பற்றப்பட்டதால் இந்த பரவல் குறைவாக இருந்தது, தற்போது அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் காற்றில் பறக்க விட்டு விட்டதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில்  மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி நிரம்பி  வருவதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியில் உண்மை கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மீண்டும் தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web