துரோகம் செஞ்சுட்டா.. காதலியைக் கொன்று வீடியோ வெளியிட்ட சைக்கோ காதலன்!

தனது துரோகம் செய்து விட்ட காதலியைக் கொன்று, அதை லைவ் வீடியோவில் வெளியிட்டு, கொலைச் செய்யப்பட்ட காதலியின் சடலத்தையும் காட்டி, ‘துரோகம் செய்யக் கூடாது’ என்று காதலன் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை இணைப்பதைத் தவிர்த்திருக்கிறோம். மிக சமீபமாக அண்டை மாநிலங்களில் காதல் விவகாரங்கள் தொடர்பான கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காதலியே காதலனை விஷம் வைத்துக் கொள்கிறாள். மத்திய பிரதேச மாநிலத்தில் காதலனே காதலியை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த அபிஜீத் படிதார் என்ற வாலிபர், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார். எண்ணெய் மற்றும் சர்க்கரை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த அபிஜீத் படிதார் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், 'துரோகம் செய்யக் கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்டிருக்கும் போர்வையை விலக்கி காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.
அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான் தான் கொலை செய்தேன் என்று கூறுகிறார். தனது காதலியான அந்த பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் நெருங்கி பழகியதாகவும், அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டதாகவும் கூறிய அபிஜீத் படிதார், ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில் தான் நான் அவளை கொன்றேன் என்றும் அந்த வீடியோவில் பேசுகிறார்.
கொலை செய்யப்பட்ட பெண் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் ஷில்பா ஜாரியா. வயது 22. அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் டெல்லியில் காதலனால் இளம்பெண் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!