பெரும் விபத்து! கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழப்பு! 2 பேர் கைது!

 
கழிவு நீர் தொட்டி

தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகள் குழந்தைகளின் உயிரை தொடர்கதையாக காவு வாங்கி வருவதைப் போல, துப்புரவு பணியாளர்களின் உயிரை பல வருடங்களாக கழிவு நீர் தொட்டிகள் காவு வாங்கி வருகின்றன. போதிய உபகரணங்கள், பாதுகாப்பு வசதிகள் ஏதுமில்லாமல் துப்புரவு பணியாளர்கள் இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்வதன் மூலம் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பலரும் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவதா என்று கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவுநீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய தனி நபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டிட உரிமையாளரே இந்த பணியில் ஈடுபடுவர் மரணமடைவதற்கு பொறுப்பு என்று அரசு இப்போது தான் அறிவித்திருந்தது. தவிர, இழப்பீடாக உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. தவிர, அப்படி ஈடுபடுத்துவது குற்றம் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தி ஒரு நாள் கூட முடியாத நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர். இவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குவதற்காக உடைகளை வெளியே வைத்து உள்ளார். 

கழிவு நீர் தொட்டி

இதனை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் கழிவுநீர் தோட்டிக்குள் எட்டிப்பார்த்து உள்ளனர். அப்போது 3 பேர் உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குடிநீர் தொட்டி மீது ஏறி ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள்!

இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 3 பேர் உயிரிழந்த தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web