பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
சோனாலி

 

நடிகை சோனாலி போகத் பாலிவுட் நடிகையாகவும், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களின் மூலமும் மக்களின் மனம் கவர்ந்தவர். சினிமா மட்டும்லாமல் அரசியலிலும் இவர் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சோனாலி போகத். இந்தியில் பிரபல நடிகையான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பிக்பாஸ் 14வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தார்.

சோனாலி

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம்காட்டும் பிரபலங்கள் பலர் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அதேபோன்று அவர்களின் திரையுலக பயணமும் வெற்றிகரமாக அமைந்துவிடுகிறது.

நடிகை சோனாலி போகத்தின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இந்த தம்பதிக்கு யஷோதரா போகத் என்ற மகள் உள்ளார். கணவர் இறந்துவிட்டதால் மகளுடன் சோனாலி போகத் தனியாக வசித்து வந்தார்.

rip

இந்நிலையில் வேலை விஷயமாக நடிகை சோனாலி கோவாவுக்கு சென்றிருந்தார். நேற்றிரவு திடீரென்று சோனாலி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் சோனாலியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web