திருச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பு!!

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தவெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மிரட்டல்

தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சிக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும், அதேபோல கன்னியாகுமரி  உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன.எனவே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த நிலையில் நேற்று திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரின் whatsapp எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தால் கண்டுபிடிக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து  திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

ரயிலுக்காக காத்திருந்த பயணிகளின் உடைமைகள், நிறுத்தப்பட்டிருந்த சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள், பயணிகளின் பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகள் சோதனை செய்யப்பட்டது. எந்தவித வெடிகுண்டு பொருட்களும் கிடைக்காத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து இந்த செய்தி அனுப்பிய நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

From around the web