புத்தகக் கண்காட்சி ரத்து!! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!

 
புத்தக கண்காட்சி

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புத்தகக் கண்காட்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டில் சென்னையில் பிரம்மாண்டமாக  புத்தகக் காட்சி நடத்தப்பட்டது. இதைப்போன்று தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 4.96 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

மாணவர்களுக்கு இலவசம்!! ஜனவரி 6 முதல் சென்னையில் புத்தக கண்காட்சி!!
ஒவ்வொரு 3 மாவட்டமும் கூட்டாக பிரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ரூ.17.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பொதுமக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம்  குறித்த பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.

புத்தக கண்காட்சி book fair

இந்நிலையில் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர்  3 ம் தேதி தொடங்க இருந்த  புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web