டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ சாதனை!

 
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெரும் பிராவோ!

டி20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி டுவைன் பிராவோ இமாலய சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனைக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் டுவைன் பிராவோ. இவர் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்து பெருமை சேர்த்துள்ளார்.

பிராவோ
டுவைன் பராவோ, நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஓவல் அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீழ்த்திய ஒரு விக்கெட் மூலம் டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்வர் என்ற பெருமையை பெற்றார். வேறு எந்த வீரரரும் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை இன்னும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை பாராட்டி ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பிராவோவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரோவா 600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள நிலையில், இதற்கு அடுத்த இடத்தில் 466 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷீத்கான் உள்ளார். பிராவோ ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிகாக விளையாடி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிராவோ

கடந்த 2004ம் ஆண்டு டுவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமானார். 2014ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் விளையாடவில்லை. இதன்பின்னர் 8 வருடங்களாக முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் இவர் கடந்த 2021ல் டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். எனினும் உள்நாட்டு டி20 தொடர்களில் மட்டும் விளையாடி சாதனைகளை புரிந்து வருகிறார்.

லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பொல்லார்ட் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web