உலக பணக்காரர்களில் 3ம் இடத்தில் தொழிலதிபர் கெளதம் அதானி! இந்தியர் முதல் முறையாக இடம்பெற்று சாதனை!

 
கெளதம் அதானி

உலக பணக்காரர்களில் வரிசையில், ஆசிய கண்டத்தைச் சேர்ந்த, அதிலும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இது தான் முதல் முறை. யெஸ்... இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி உலக பணக்காரர்களின் வரிசையில் 3ம் இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் பிரான்ஸ் நாட்டின் லூயி வுய்ட்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி 3ம் இடத்தை பிடித்துள்ள நிலையில், முதல் இடத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கும், 2வது பணக்காரராக ஜெப் பெசோசும் இடம்பிடித்துள்ளனர். 

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியல்  வெளியிட்டுள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அதிலும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை என்பது வரலாற்று சாதனையாகும்.

கெளதம் அதானி

இதற்கு முன்னர் 10வது இடத்தில் இருந்த அதானி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இன்போசிஸ் கம்பெனி நிறுவனரான பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறினார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 251 பில்லியன் அமெரிக்க டாலராக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உள்ள ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 153 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

3வது இடத்தில் உள்ள இந்திய தொழில் அதிபரான அதானி குழுமம் எரிசக்தி, துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் விமான நிலையங்களின் மொத்த சொத்து மதிப்பின் படி ஏனைய நிறுவனங்களின் பங்குகளும் கணக்கெடுக்கப்பட்டு அவருக்கு 3வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் ரூ.60 ஆயிரம் கோ£ மதிப்பிலான சொத்துக்களை கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தும் நோக்குடன் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான தொண்டு நடவடிக்கைகளுக்காக அதானி குழுமம் வழங்கி உதவி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளதால் அதானி குழும தலைவர் அதானிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.