பரபரப்பான தேர்தல் களம்!! வேண்டுகோள் வைத்த பிரதமர்!!

 
பிரதமர் மோடி

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

பிரதமர் மோடி

மாநிலத்தின் முக்கியமான ஆமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த  தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.  இதனிடையே பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் ஆமதாபாத்தில் உள்ள ராணிப்பில் உள்ள நிஷான் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது தாயார் ஹீராபென் மோடியைச் சந்தித்து ஆசி பெற்றார்.  

தாயிடம் ஆசி பெற்றார்

இந்த நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்   அவர் கூறியதாவது, குஜராத் தேர்தலின் 2-வது கட்டத்தில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் யாருடைய தொகுதிகள் உள்ளனவோ அவர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web