இடைத்தேர்தலா? - ஒரே போடு போட்ட பாமக தலைவர் அன்புமணி.. கலக்கத்தில் அதிமுக !!

 
யளனக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவையடுத்து பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் அதிமுகவில் கதக்களி தொடங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் நேரடி மோதலில் உள்ளனர். 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

eps

ஆனால், இன்று ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆதரவு கோரியுள்ளார். இதேபோல் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டிபோட்டு சந்தித்து வருகின்றனர். 

இந்நிலையில், பாமக நிலைப்பாடு குறித்து அக்கட்சித் தலைவர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரையே பேரவை உறுப்பினராக்கிவிடலாம் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.

eps

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்றுபாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

From around the web