இடைத்தேர்தல் நிலவரம்: 7ல் பாஜக 4ல் பாஸ்! பிரதமர் மோடி பேச்சு சிதம்பரம் குற்றச்சாட்டு!

 
மோடி சிதம்பரம்

இமாச்சலப்பிரதேசத்தில் சட்டசபைக்கு வரும் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்குள்ள சோலன் பகுதியில் நடந்த பாஜ பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "பழங்குடி இன மக்கள் தாமரைக்கு ஆதரவளிக்க வேண்டும். உங்களின் ஓட்டுக்கள் பிரதமருக்கு ஆசீர்வாதம். வேட்பாளர்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். தாமரையை மனதில் கொள்ள வேண்டும். தாமரை சின்னத்தை எங்கு பார்த்தாலும் அது மோடி ஜி உங்களிடம் வந்திருக்கிறார் என்பதை குறிப்பதாகும்" என்றார்.

மோடி

இதை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தொகுதியில் வேட்பாளர் பெயரை வாக்காளர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை என்று பிரதமர் கூறினார். தாமரைக்கு ஓட்டளியுங்கள். அது மோடிக்கு அளிக்கும் ஓட்டு என்றும் பிரதமர் கூறினார். பார்லிமென்ட் விவாதங்கள் மற்றும் செய் தியாளர் சந்திப்புகளை புறக்கணித்து விட்டு,பிரதமர் இப்போது தொகுதி அடிப்படையிலான பார்லிமென்ட் ஜனநாயகத்தின் அடிப்படையையே குழிதோண்டிப் புதைத்து வருகிறார்.

ஜனாதிபதி ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பக்தர் களும் நீண்ட காலமாக வளர்த்து வருவதை நாங்கள் அறிவோம். ஜனாதிபதி ஆட்சி நாட்டில் பெரும்பான் மைவாதத்தை நிலைநிறுத்தும். பன்முகத்தன்மை கொல்லப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரிபுரா தேர்தல்: எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த பாஜக!

இந்நிலையில் நேற்று நான்கு மாநிலங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக நான்கு தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் அனைத்து தொகுதியிலும் டெபாசிட்டை இழந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web