பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் முதல்வர் பங்கேற்பு!!

 
பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

அண்மையில் இதன் டீசர் வெளியாகிது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.

மணிரத்னம் படைப்பில் ’பொன்னியின் செல்வன்’ போஸ்டர் வெளியீடு!

ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மற்ற பாடல்கள் மட்டும் டிரைலர் வெளியீட்டை மிகப்பெரிய அளவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

பொன்னியின் செல்வன்

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வட குழுவினர் அழைத்துள்ளனர். அந்த விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் சினிமா விழாக்களில் பெரிய அளவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் சோழர்களை மையமாக கொண்ட வரலாற்று படம் என்பதால் பொன்னியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web