சென்னையில் கேபிள் டி.வி. ஊழியர் சரமாரியாக வெட்டி கொலை… நேரில் பார்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம்…

 
ஓட, ஓட வெட்டி கொலை

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனே பொது இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம் சென்னையில் பட்டப்பகலில் பொது இடத்தில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை   நேரில் பார்த்த  மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை எழும்பூர் போலீஸ் நிலையம் அருகில் கேபிள் டி.வி. அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.   இந்த அலுவலகத்தில் பணிபுரியும் விவேக் என்பவர் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்துள்ளார். 

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

 

அப்போது அங்கு ஏற்கனவே பணி புரிந்த சந்தோஷ் திடீரென அலுவலகத்தில் புகுந்து விவேக்கின் கழுத்தில் ஆடு வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதனால் அலறி துடித்த விவேக் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து உயிருக்கு போராடிய படி கதறி துடித்து உயிரிழந்தார். விவேக்கை வெட்டிய சந்தோஷ்   அரிவாளுடன் தப்பிக்க முயன்றார்.  உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  

கட்டையால் அடித்து கொலை

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சந்தோசிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலைய சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எழும்பூர் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவம் அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது

From around the web