ஒரே நாளில் 11 கிலோ தங்கம் கடத்தலா…? திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு!!

திருச்சி  விமான  நிலையத்தில்  55  பயணிகளிடம்  இருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல்  செய்யப்படுள்ள  சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 
தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா,சிங்கப்பூர்,மஸ்கட் ஓமன்,துபாய் ன,அபுதாபி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சிறப்பு மீட்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தினசரி விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தின் வழியாக வெளி நாடுகளிலிருந்து ஏராளமானோர் தங்கம், போதை பொருட்கள் கடத்துவதாக சமீப காலமாக குற்றசாட்டுக்கள் நிலவி வந்தது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து  திருச்சிக்கு வந்த  விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை  செய்தனர். அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த சுமார் 55 பேரிடமிருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு நபர்கள் தங்கத்தை வயிற்றில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பின்னர் அவர்கள் அனைவரையும் கைது செய்த அதிகாரிகள் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்படுள்ள சம்பவத்தால்  திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web