அதிர்ச்சி!! ஓசூர் அருகே கார் மீது பேருந்து மோதியதில் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார்!

 
கார் விபத்து

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 3 பெண்கள், 3 ஆண்கள் என 6 பேர் பெங்களூருவிலிருந்து இன்று, சென்னைக்கு செல்வதற்காக காரில் வந்துகொண்டிருந்தனர்.  அவர்கள் பயணித்த சுண்டகிரி என்னுமிடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது,  இவர்கள் மின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று காரை முந்திச் செல்ல முயன்றது.  அரசு பேருந்தை வேலூரை சேர்ந்த சாய்ராம் கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அரசு பேருந்து, அந்த காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அந்த கார், சாலை தடுப்பு மீது இடித்து, அங்குள்ள கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அனைவரும் பலஹ்த காயத்துடன் அதிஷ்டவசமாக  உயிர்தப்பினர். இதனையடுத்து இதனை கண்ட பொதுமக்கள் விரைவாக செயல்பட்டு காரில் இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர்  இது குறித்து தகவலறிந்து வந்த சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து  விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை நடத்தினர்.ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்து மோதியதில், பள்ளத்தில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.