கார் கவிழ்ந்து விபத்து! திமுக எம்.எல்.ஏ., மருத்துவமனையில் அனுமதி!

 
திமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம்

இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளதையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 22,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர், தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் தலைமை செயலர் என பலரும் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

அந்தியூர் திமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம்

இது நாள் வரையில் மோடி கோ பேக் என்று கூறி வந்த திமுக, இம்முறை ஆளுங்கட்சியாக இருப்பதால், பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு தரவும், வேறு கட்சியினர் யாரும் கோ பேக் மோடி என்று எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றன. கறுப்பு பலூன்களைப் பறக்க விட்டு, எதிர்ப்பு தெரிவித்த வந்த திமுக, இம்முறை பலூன்களைப் பறக்க விட தடையும் விதித்திருக்கிறது.

இந்நிலையில், பல மாவட்டங்களிலும் இருந்து திமுக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இன்று நடைப்பெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக திமுக எம்.எல்.ஏ.,  ஏ.ஜி.வெங்கடாசலமும் கார் மூலமாக சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

அந்தியூர் திமுக எம்.எல்.ஏ வெங்கடாசலம்

இந்நிலையில், திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்தின் கார் ஈரோடு மாவட்டம் பவானி அருகே வாய்க்கால் பாளையம் வளைவில் வேகமாக வந்து கொண்டிருந்த போது, திடீரென கார் கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலத்திற்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web