ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை 3 நாள் கொடி ஏற்றி கொண்டாடுங்க! சென்னை மேயம் மேயர் பிரியா வேண்டுகோள்!

 
ப்ரியா சென்னை மாநகராட்சி பட்ஜெட்

ஆகஸ்ட் 15ம் தேதி, நாட்டின் 75வது  சுதந்திர  தின விழாவை முன்னிட்டு  பொதுமக்கள்  தங்கள்  வீடுகளில்  3 நாள்  தேசியக்  கொடியினை  ஏற்றி  வைக்க வேண்டும் என சென்னை மாநகர மேயர் பிரியா  வேண்டுகோள் விடுத்துள்ளார்..

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் சார்பில் வருகின்ற ஆகஸ்டு 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றி சுதந்திரத் திருநாளை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் , 75வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஆகஸ்டு 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களும் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றுவது தொடர்பாக மண்டலக்குழுத் தலைவர்கள், மண்டல அலுவலர்கள், வியாபார சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்  ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,  மேயர் மண்டலக்குழுத் தலைவர்களிடம் அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக இயன்ற அளவிற்கு மூவர்ண தேசியக் கொடியினை ஏற்பாடு செய்து தரவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும் கேட்டுக் கொண்டார். மேலும், தேசியக் கொடியினை தயார் செய்யும் பொழுது  பிளாஸ்டிக் வகை கொடிகளை முற்றிலும் தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web