கொண்டாட்டம்!! இன்று தென்மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள்!!

 
அரசு பேருந்துகள்

நாளை ஆகஸ்ட் 31ம் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் ஊருக்கு செல்வது வழக்கம். நாளை முகூர்த்த நாளாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திருமணங்கள், சுபகாரியங்கள் நடைபெற உள்ளன. இதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அரசுப் பேருந்து
இதன் பொருட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்கள், பேருந்துகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஏ.சி. படுக்கை பெட்டியிலும் இடமில்லை. இதனால் காத்திருப்போர் பட்டியல் 300க்கும் மேலாக உள்ளது. ஏற்கனவே கடந்த வாரத்தில் வெள்ளி சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக இருந்ததால் பேருந்து, ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை மட்டுமின்றி பிற நகரங்களிலும் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  இன்று மாலை முதல் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போக்குவரத்து துறை எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தினமும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு  தினமும் 2200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


இன்று வழக்கமான பேருந்துகள் தவிர மேலும் கூடுதலாக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம், சேலம், கும்பகோணம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் தேவையை சமாளிக்க சிறப்பு பேருந்துகளை இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை கூட்ட நெரிசலை சமாளிக்க தேவையான அரசு பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா தொடங்கி இருப்பதால் வேளாங்கண்ணிக்கும் தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அரசுப் பேருந்து

புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், சேலம் உட்பட தமிழகத்தின் மற்ற  பகுதிகளுக்கும் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டுள்ளனர். மாலையில் இருந்து வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படும் . பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web