‘சந்திரமுகியா மாறிய விராட் கோலி’ வைரலாகும் அஸ்வினின் வீடியோ!

 
கிரிக்கெட் கோலி அஸ்வின் விராட்

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாகவே மாறிய விராட் கோலியின் ஆட்டத்தைப் புகழ்ந்து அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பந்துகளை விளாசித் தள்ளிய விராட் கோலியை ‘சந்திரமுகியா மாறின கோலி’’ என்று அஸ்வின் புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்த வீடியோ தற்போது குட்டி ஸ்டோரியாக வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெளுத்து வாங்கியது. அதிலும் விராட் கோலி 82 ரன்களை அடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதன் காரணமாக பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் விராட் கோலிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து இந்திய வீரர் அஸ்வின், விராட் கோலியின் இன்னிங்சை ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனத்தை மேற்கோள் காட்டி புகழ்ந்துள்ளார். அதில், விராட் கோலிக்குள்ள என்ன பூந்துடுச்சுன்னே தெரியல. ஏதோ பூந்துடுச்சு சத்தியமா. அதுல ஒண்ணும் சந்தேகமே கிடையாது. இந்த மாதிரிலாம் ஷார்ட்ஸ் ஆடி. ஷார்ட்ஸ விடுங்க. 45 பாலுக்கு அப்புறமா சந்திரமுகியா மாறின கங்காவாதான் அவர் ஆட்டத்த பாக்கணும்.  கண்ண விரிச்சுக்கிட்டு சந்திரமுகி படத்துல ஜோதிகா வந்து 'ஒதலவா' அப்படின்னு சொல்ற மாதிரி. நான் பேட் செய்ய உள்ள போறேன். அப்போ ஒரு பால்ல ரெண்டு ரன்னு தேவை. அப்படி கண்ண வச்சுக்கிட்டு அவர் பேசினாரு. 'இங்க அடி. அங்க அடின்னு'. என்னால என்ன முடியுமோ அத நான் பண்றேன். அப்படின்னு மனசுக்குள்ள நினச்சுக்கிட்டு அந்த பந்த ஆடினேன்" என்று பாராட்டு தள்ளியுள்ளார்.

கிரிக்கெட் விராட் கோலி

சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு பலர் ‘சந்திரமுகியா மாறின கங்காவை பார்’ என்று ஏற்கனவே நகைச்சுவையாக பேசி வரும் நிலையில்தற்போது அஸ்வினின் இந்த குட்டி ஸ்டோரி வீடியோ டிரெண்டாகி வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web