விலசாம் மாற்றம், திருத்தம், பெயர் சேர்க்க.. இன்று ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்!

 
ரேஷன் விரல் பதிவு கைரேகை

இன்று ரேஷன் கார்டுகளை புதிதாக விண்ணப்பித்தவர்கள் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள், ரேஷன் அட்டைகளில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், பெயர் திருத்தம், விலாசம் மாற்றம், மற்றும் வேறு திருத்தங்கள் செய்ய விண்ண்ப்பித்தவர்கள் என நுகர்வோரின் குறை தீர்க்கும் முகாம் நடைப்பெற உள்ளது. தற்போது தமிழகத்தில் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டைகளில் திருத்தங்களைச் செய்வதற்கு நுகர்வோர்களின் வசதிக்காக மாதம் தோறும் பகுதி வாரியாக குறைத் தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.  ரேஷன் அட்டைதாரர்கள் தங்களை குறைகளை ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்களில் பங்கேற்று தீர்த்துக் கொள்ளலாம்.

குறைதீர்க்கும் நாள்

இந்த முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.அதன்படி சென்னையில் இன்று நவம்பர் 12ம் தேதியன்று (சனிக்கிழமை) இந்த மாதத்துக்கான பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் குறைதீர்ப்பு முகாம் பகல் 1 மணி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரேஷன்

இதில் பொது மக்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் அட்டை, நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறலாம். 

வயதான மூத்த குடிமக்கள் முகாமில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களின் அங்கீகாரம் பெற்ற நபரின் மூலம் மாற்றங்களை செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பொது மக்கள் இன்று நவம்பர் 12ம் தேதி குறைதீர் முகாமை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல இடங்களில் சென்னை மிதக்கிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பல சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. குறைத்தீர்ப்பு முகாமுக்குச் செல்வதை முதியவர்கள் தவிர்த்துடுங்க. மற்றவர்களும் பாதுகாப்பாக செல்லுங்க. மழை பெய்யலைன்னாலும் குடையோட கிளம்புங்க. அடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்பிருக்கு. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web