வெற்றிவாகை சூடி தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

 
உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்  கடந்த மாதம் 28ம் தேதி 22-வது தொடங்கியது.  இந்த போட்டிகளில் மொத்தம் 72 நாடுகள் கலந்து கொண்டன. 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.  இந்தில் இந்தியா சார்பாக சுமார் 200க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.  இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பினார்கள்.

இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்  மொத்தம் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று  பகத்தப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.  இது இந்தியாவிற்கு இமாலய சாதனையாகும்.  இந்நிலையி இன்று ஆதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில், இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன்  ஆகியோர் கம்பீரமாக ஏந்திச்சென்றனர். இந்நிலையில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், பூஜாகெலாட் ஆகியோர். இன்று தாயகம் திரும்பினர்.  அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்து இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்இதேபோல் காமன்வெல்த் போட்டிகளில்  பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பும் இந்திய வீரர், விராங்கனைகளுக்கு நாடு முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பதக்கம் வென்ற அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

From around the web