சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் குளறுபடி… தேர்வு ரத்து…

 
சென்னை பல்கலைக்கழகம்

வினாத் தாளில் குளறுபடி நடந்துள்ளதால், உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற்ற தமிழ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இன்று தமிழ் பாட தேர்வு வினாத்தாளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

டிஎன்பிஎசி   தேர்வு  தேதியில்  திடீர்  மாற்றம்

3-வது செமஸ்டர் தமிழ் வினாத்தாள்களுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4-வது செமஸ்டர் வினைத்தாள்   மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர் தேர்வுக்குறிய கேள்வித்தாளை பார்த்ததும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு

இதனால்  தமிழ் பட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக  சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது. விரைவில், மாற்று தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு வினாத் தாள் குளறுபடியால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.