முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘செக்’! லோ லோன்னு அலைஞ்சது தான் மிச்சம்! வெளுத்து வாங்கிய நரிக்குறவ பெண் அஸ்வினி!

 
நரிக்குறவர் பெண் அஸ்வினி

முதல்வர் ஸ்டாலின் கொடுத்த செக்கை வைத்துக் கொண்டு லோ லோன்னு அலைஞ்சது தான் மிச்சம். அவங்க செய்யறேன்னு சொன்ன எதையுமே இதுவரைக்கும் செய்யலை என்று ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் நரிகுறவர் பெண்மணி அஸ்வினி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும் அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண்ணான அஸ்வினி சமூக வலைதளங்களில் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.


இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அப்பெண் மற்றும் அச்சமூகத்தை சேர்ந்த பிற மக்களின் இருப்பிடம் அறியப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.4.53 கோடி மதிப்பில் 282 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். பூஞ்சேரி நரிக்குறவர், இருளர் மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதி சான்றிதழ்கள் மற்றும் நல வாரிய அட்டைகளை முதல்வர் வழங்கினார்.

இந்நிலையில். தங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி எதையும் வங்கியினர் வழங்கவில்லை என்றும் தங்கள் பட்டா, ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை அளித்தும் கூட மேலும் சில ஆதாரங்கள் தேவை என அதிகாரிகள் கேட்பதாகவும் அச்சமூக மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நரிக்குறவர் பெண் அஸ்வினி

இது குறித்து அஸ்வினி கூறுகையில், மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என்ன ஒரு கடை கூட கிடையாது, வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web