நாளை முதல்வர் ஸ்டாலின் மதுரை பயணம்!!

 
ஸ்டாலின்

நாளை மறுநாள் அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு நேரில்  சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

அதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல்வர்  மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு அக்டோபர் 30ம் தேதி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து நாளை அக்டோபர் 29ம் தேதி  மாலை 6 மணி அளவில் விமானம் மூலம் மதுரை செல்கிறார்.  சனிக்கிழமை இரவு மதுரையில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர்  ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 30ம் தேதி காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர்  மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

முதல்வர் ஸ்டாலின்

அதன் பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினமே பிற்பகலில் மீண்டும் முதல்வர் சென்னை திரும்புகிறார். முதல்வர் பசும்பொன் கிராமம் செல்வதையொட்டி வழிநெடுக  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வருடன் பல்வேறு கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் என  ஏராளமான  பிரபலங்கள், அரசியல்வாதிகள் வருகை தர உள்ளதால் பசும்பொன் கிராமத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web