14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை!! முக்கிய அறிவிப்புக்கள் வெளியாக வாய்ப்பு!!

 
ஸ்டாலின்


தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணை உள்ளிட்ட அணைகள் கொள்ளளவை தாண்டியது. இதைத்தொடர்ந்து கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின் கூட்டம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் மழை, வெள்ள நிலவரம், திருச்சி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்ட கலெக்டர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில்  அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மழை 

தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? அவை எந்த முறையில் சிறப்பாக செயல்படுகிறது? வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை என்ன? என்பது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்துறை சார்ந்த வருவாய் அமைச்சர், அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.கூட்டத்தில் முடிவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web