முதல்வர் தாயார் சென்ற கார் விபத்து!! பரபர நிமிடங்கள்!!

 
முதல்வரின் கார்

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி. ஆந்திர மக்களால் இவர் அன்பாக விஜயம்மா என்று அழைக்கப்படுகிறார்.விஜயலட்சுமி, தனது கணவர் ராஜசேகர ரெட்டியின் நண்பரான ஐபாபு ரெட்டியின் குடும்பத்தினரை பார்க்க நேற்று காரில் கர்னூல் சென்றிருந்தார்.  அவர்களை சந்தித்துவிட்டு பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கார் புத்தி பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென காரின் 2 டயர்களும் ஒரே சமயத்தில் பெரிய சத்தத்துடன் வெடித்தன.

விபத்து
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக இருந்தது. காரில் இருந்த டிரைவர் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தாறுமாறாக ஓடிய காரில் தத்தளித்தனர். ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு காரை இயக்கி சாலையில் ஓரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஜெகன்மோகன்ரெட்டி
இது குறித்து தகவல் அறிந்ததும் மற்றொரு கார் வரவழைக்கப்பட்டு விஜயலட்சுமி  ஐதராபாத் புறப்பட்டு சென்றார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி, தனது மகனின் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து விலகினார்.  அதைத்தொடர்ந்து தெலுங்கானாவில் தனது மகள் ஷர்மிளா ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web