சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம்.. உறவினர்கள் ஆத்திரம் !!

 
hospitel

அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் தப்பியோடினார். 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெக்னீசியனாக செல்வக்குமார் என்ற பரலோகன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உள்நோயாளியாக பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்பெண் மருத்துவமனை வார்டில் மயக்க நிலையில் இருந்தபோது, டெக்னீசியனாக செல்வக்குமார் என்ற பரலோகன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

hospitel

மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அப்பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். 

hospitel

சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக உறவினர்கள் புகார் அளித்தது தெரியவந்ததும், டெக்னீசியனாக செல்வக்குமார் தப்பியோடினார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web