நாளை ‘சித்ரங்’ புயல் உருவாகும்! 25ம் தேதி கரையை கடக்கிறது! புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 
புயல்

நாளை சித்ரங் புயல் உருவாவதையடுத்து, துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளை உருவாகும் புயல், நாளை மறுதினம் அக்டோபர் 25ம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில், தீபாவளி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை

குறைந்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காலை அக்டோபர் 24ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அதன் பின்னர் வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் சித்ரங் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே போல், புயல் கரையைக் கடந்தாலும் அக்டோபர் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web