திணறிய சென்னை! ஒரே நாளில்1,42,062 பேர் பேருந்துகளில் பயணம்! சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

 
train ladies பெண்கள் ரயில் வேலை

இன்று முதல் திங்கட்கிழமை வரையிலான தொடர் விடுமுறையை கழிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியதால், நேற்று காலையில் இருந்தே சென்னை மாநகர் திணறியது. நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் இருந்து 1,42,062 பேர் பேருந்துகளில் பயணம் செய்ததாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் முண்டியடித்து ஏறத் துவங்கினார்கள். கிடைக்கும் பேருந்தில் ஏறி சொந்த ஊர் செல்லும் ஆர்வத்தில் பலரும் சென்னையை அடுத்த பெருங்களத்தூர், வண்டலூர், சிங்கப்பெருமாள் கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கே வரும் பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.

வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் இதைத்தொடர்ந்து வருகிற 15ம் தேதி சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். 

ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

அதன்படி 2,732 பேருந்துகள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. இதில் திருச்சி , மதுரை மற்றும் சேலம் மாவட்டத்திற்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதனால் கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் சென்னைக்கு திரும்பி வரவும் தகுந்த ஏற்பாடுகளை போக்குவரத்துத் துறை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் கூட்டம்

தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் செல்ல மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடிய போது அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது எந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web