குடிமகன்களே உஷார்!! நாளை டாஸ்மாக், பார்கள் செயல்படத் தடை!!

 
டாஸ்மாக் விடுமுறை

நாளை ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம்  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றன. முக்கிய இடங்களில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன . நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் பேருந்து நிலையங்கள், வரலாற்று சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த நாளில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாவண்ணம் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை .  குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது  வழக்கமாக இருந்து வருகிறது.

டாஸ்மாக்

அதன்படி சுதந்திர தினத்தில்  ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

அதில் ஆகஸ்ட் 15ம் தேதி திங்கட்கிழமை சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள்,  மற்றும் உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனைக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தைகளில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web