இலவசமா ஊர் சுத்தலாம்!! நாளை முதல் 10 நாட்களுக்கு கட்டணம் கிடையாது!!

 
சுற்றுலாத் தலங்கள்

இந்தியாவில்  75வது  சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கொண்டாட்டங்கள் வருடம் முழுவதும் நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

தாஜ்மஹால்


இதன்படி இந்தியாவின் 75வது சுதந்திர தினம்  'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் நடத்தப்பட உள்ளது.  இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள  அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாமல்லபுரம்

நாளை ஆகஸ்ட் 5 முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web