பிகினியில் கல்லூரி பேராசிரியை! வைரலாக்கிய மாணவர்கள்! விழி பிதுங்கும் பல்கலைக்கழகம்!

 
நீச்சல் உடையில் ஆசிரியை

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராஃமில், தான்  படிக்கும் கல்லூரியின் இளம் பேராசிரியை ஒருவர் பிகினி அணிந்தப்படி புகைப்படம் பதிவேற்றி இருப்பதைப் பார்த்த மாணவர், சக மாணவர்களுக்கு அந்த புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார். கல்லூரி மாணவர்களிடையே பேராசிரியையின் பிகினி புகைப்படம் வைரலான நிலையில், மகன், பேராசிரியையின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தந்தை, இது குறித்து கல்லூரியில் புகார் தெரிவித்தார். பேராசிரியையின் வேலையைப் பறித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். இது குறித்து போர்க்கொடி தூக்கி, போராடி வருகிறார் பேராசிரியை.

கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தில், இளம்பெண் ஒருவர் பேராசிரியையாக பணியாற்றி வருகின்றார். அவர், பிகினி அணிந்தப்படி, தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேலையில் சேர்வதற்கு முன்பாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில், பேராசிரியையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடர்ந்து வரும் மாணவ மாணவிகள் அந்த புகைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். ஆசிரியர் பதிவிட்ட அந்த பதிவை  மாணவர் ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த மாணவனின் தந்தை ஒரு ஆசிரியர் இப்படி செய்யலாமா செய்வது? என கூறி  சத்தமிட்டதை அடுத்து  அந்த ஆசிரியர் மீது  அவர் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அவரை கல்லூரியை விட்டு நீக்கி இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய அந்த பெண் ஆசிரியர் பல்கலைக்கழக அதிகாரிகள் தன்னை பணியை விட்டு போகும் படி, கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது 'பல்கலைக்கழகத்தின் நற்பெயரைக் கெடுக்கும்' என்று அவர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட 30 வயதான பேராசிரியை கூறியுள்ளார். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் பேசிய பேராசிரியை, இரண்டு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியையான, தன்னை ராஜினாமா செய்ய கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது, பெரும் பாலியல் துன்புறுத்தல் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளையும் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. உதவி பேராசிரியை தாமாக முன் வந்து ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளது.

என்னை வேலைக்கு எடுக்கும் பொழுது, எனது சமூக வலைத்தள கணக்குகளை எப்படி ஆராயாமல் விட்டீர்கள்? என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் பேராசிரியை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web